பத்து செகண்ட் கதைகள்
பத்து செகண்ட் கதைகள் தவறுகள் அறுபது வயது மித்திரன் முப்பதாம் வயதில் செய்த தவறை சரி செய்ய கால இயந்திரத்தின் கியரை தட்டினான் . முப்பதாம் வயதில் மித்திரன் இருபதாம் வயதில் செய்த தவறை சரி செய்ய தயாராகிகொண்டிருந்தான் . அவன் தினமும் காலை என் வாசல் எதிரே ஒருவன் நிற்பதை கண்டு எரிச்சலுற்று அவனிடம் சண்டை போட அருகில் செல்ல , அவன் என் கையில் ஓர் கைகடிகாரம் தந்து பின் காணாமல் போனான் . நேரமும் காலமும் தவறாய் இருக்க சரி செய்தபடி என் வீட்டை நோக்கி நடக்க அங்கு என் முன்னே நான் நின்றுகொண் டிருந்தேன் . இருவர் இன்றோடு முடிந்தாள் , அவள் குடிக்கும் பாலில் சயனைட் கலந்து , கோப்பையின் கீழே sorry என்று எழுதி வைத்து படுத்துகொண்டான் . அவள் வந்தாள் , பாலை பருகினாள் , படுத்து உறங்கினாள் . மறுநாள் சில்லிட்ட அவள் உடலை புன்னகையுடன் முத்தமிட்டபடி அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை முழுவதும் குடித்து முடித்தான் .... அதன் அடியில் sorry என்று ஒட்டி இருந்ததை கவனியாமல் . முட்டை " மத்த சாப்பாடெல்ல...