பத்து செகண்ட் கதைகள்
பத்து
செகண்ட் கதைகள்
அறுபது
வயது மித்திரன் முப்பதாம் வயதில் செய்த தவறை சரி செய்ய கால
இயந்திரத்தின் கியரை தட்டினான். முப்பதாம் வயதில் மித்திரன் இருபதாம் வயதில் செய்த
தவறை சரி செய்ய தயாராகிகொண்டிருந்தான்.
அவன்
தினமும் காலை என் வாசல் எதிரே ஒருவன் நிற்பதை கண்டு
எரிச்சலுற்று அவனிடம் சண்டை போட அருகில் செல்ல, அவன் என் கையில் ஓர் கைகடிகாரம் தந்து பின் காணாமல் போனான். நேரமும் காலமும் தவறாய் இருக்க சரி செய்தபடி என் வீட்டை நோக்கி நடக்க அங்கு என் முன்னே நான் நின்றுகொண்டிருந்தேன்.
இருவர்
இன்றோடு
முடிந்தாள், அவள் குடிக்கும் பாலில் சயனைட் கலந்து, கோப்பையின் கீழே sorry என்று எழுதி வைத்து படுத்துகொண்டான். அவள் வந்தாள், பாலை பருகினாள், படுத்து உறங்கினாள்.
மறுநாள்
சில்லிட்ட அவள் உடலை புன்னகையுடன் முத்தமிட்டபடி அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலை முழுவதும் குடித்து முடித்தான்.... அதன் அடியில் sorry என்று ஒட்டி இருந்ததை கவனியாமல்.
முட்டை
"மத்த சாப்பாடெல்லாம் சுத்தமா காலி பண்ற, முட்டைய மட்டும் ஏண்டி அப்படியே கொண்டு வர்ற" எரிச்சலாய் கத்தினாள் அனுராதா, "அம்மா, எங்க மிஸ்ஸுக்கு முட்டைனா பிடிக்காதுமா", முதல் வகுப்பு படிக்கும் ஆராதனா கத்தியபடியே விளையாட வெளியே ஓடினாள்.
Comments
Post a Comment