அடுத்த பத்தாண்டுகளில் இளைஞர்களும் அவர்கள் தேவைகளும்.
பொருளாதாரம்
இன்றைய இளைஞர்கள்
பொருளாதாரம் குறித்த தெளிவும் வழிநடத்தலும் இன்றி திசை மாறி சென்று கொண்டு
இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக ஊடகம் மற்றும் எளிய வழியில் பணம் சம்பாதிக்கும்
வழிகளே இன்று பிரதானமாய் தோன்றுகிறது. சற்று படித்த பொருளாதரத்தில் மேன் தங்கிய
இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு வேளைகளில் தங்கள் தேடலை தீவிர
படுத்தியுள்ளனர். மிக சில இளைஞர்களே தொழில் மற்றும் தனியார் தொழில்களில் ஈடுபாடு
காட்டுகின்றனர். மேலும் ஒரு சிலர் வெளிநாட்டு வேளைகளில் முயற்சி செயகின்றனர்.
இப்படி 4 வகைகளில் சிதறி இருக்கும்
இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செயும் ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டம் இன்றைய அவசிய
தேவையாய் உள்ளது.
ஆன்மிகம்
இன்றைய இளைஞர்கள் ஆன்மீகத்தில் இரண்டு பிரிவுகளாக உள்ளனர். ஒன்று charismatic என்று அழைக்கப்படும் ஆன்மீகத்தில் மட்டும் அதீத ஈடுபாடு காட்டும் இளைஞர்கள் மற்றொன்று சராசரி இளைஞர்கள் . முதல் வகை இளைஞர்கள் மத கோட்பாடுகள் மாற்றும் நம்பிக்கை சார்ந்த தீவிர மதவாதிகளாய் உள்ளனர். இவர்கள் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு இல்லாதவர்களாக உள்ளனர். இரண்டாம் வகை இளைஞர்கள் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்துபவர்களாக மத கோட்பாடுகள் மாற்றும் நம்பிக்கை சார்ந்த செயல்பாடுகளில் கவனம் செலுத்தாதவர்களாக உள்ளனர். இவ்விரண்டு விதமான இளைய சமுதாயத்தின் தேவைகளை தீர்க்கும் ஒரு புள்ளியில் நாம் நம் செயல்பாடுகளை முன்னிறுத்த வேண்டும்.
அரசியல்
இன்று அணைத்து
இளைஞர்களும் அரசியலை குறித்து ஏதோ ஒரு தெளிவற்ற சிந்தனையில் உள்ளனர். அரசியலில்
முழு நேரம் இயங்கும் இளைஞர்கள் மற்றும் அரசியலை தூர நின்று கவனிக்கும் இளைஞர்கள்
என்று இரண்டு வகை இளைஞர்கள் இன்று நம்மிடையே உள்ளனர். இவர்களும் தெளிவான அரசியல்
பார்வை அடையவும் மறைமுக மற்றும் நேர்முக அரசியலில் ஈடுபடவும் நம் செயல்பாடுகள்
அமைய வேண்டும்.
உளவியல்
இன்று உளவியல்
ரீதியாக பல இளைஞர்கள் குழப்பத்திலும், கேள்விகளாலும் நிறைந்து உள்ளனர். போதை மற்றும் சமூக
ஊடகத்தின் அடிமைகளாகவும் உள்ளனர். இது பலவிதமான உளவியல் பிரச்சனைகளுக்கு வழி
வகுக்கிறது. இவர்களை தெளிவான ஒரு வழியில் நடத்தவும் உளவியல் ரீதியாக தன்னம்பிக்கை
மற்றும் சுயமரியாதை, சுயஒழுக்கம், நிறைந்த இளைஞர்களாக உருவாக்கும் ஒரு முக்கிய சவால் நம் முன் உள்ளது. இந்த
ஒட்டுமொத்த நோக்கத்தை அடைய வடிவமைக்கப்பட்ட செயல் அல்லது திட்டம் நமக்கு அவசர
தேவையாக உள்ளது. இதை நாம் அறிவியல் ரீதியாகவும், ஆன்மீக ரீதியாகவும் முன் எடுத்து செல்ல நீண்ட
கால செயல் திட்டமும், உறுதியான
கோட்பாடுகளும் வரையறுக்க பட வேண்டும்.
இப்படி நான்கு
வகையில் நம் இளைஞர்களை வரும் 8 லிருந்து 10 ஆண்டுகளில் ஒரு தெளிவான வழிகாட்டுதலும், வழிநடத்தலும் தருவது நமது
முதன்மையான கடமையாக உள்ளது.
Comments
Post a Comment