அடுத்த பத்தாண்டுகளில் இளைஞர்களும் அவர்கள் தேவைகளும்.
பொருளாதாரம் இன்றைய இளைஞர்கள் பொருளாதாரம் குறித்த தெளிவும் வழிநடத்தலும் இன்றி திசை மாறி சென்று கொண்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு சமூக ஊடகம் மற்றும் எளிய வழியில் பணம் சம்பாதிக்கும் வழிகளே இன்று பிரதானமாய் தோன்றுகிறது. சற்று படித்த பொருளாதரத்தில் மேன் தங்கிய இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு வேளைகளில் தங்கள் தேடலை தீவிர படுத்தியுள்ளனர். மிக சில இளைஞர்களே தொழில் மற்றும் தனியார் தொழில்களில் ஈடுபாடு காட்டுகின்றனர். மேலும் ஒரு சிலர் வெளிநாட்டு வேளைகளில் முயற்சி செயகின்றனர். இப்படி 4 வகைகளில் சிதறி இருக்கும் இளைஞர்களின் தேவைகளை பூர்த்தி செயும் ஒரு ஒருங்கிணைந்த செயல் திட்டம் இன்றைய அவசிய தேவையாய் உள்ளது. ஆன்மிகம் இன்றைய இளைஞர்கள் ஆன்மீகத்தில் இரண்டு பிரிவுகளாக உள்ளனர். ஒன்று charismatic என்று அழைக்கப்படும் ஆன்மீகத்தில் மட்டும் அதீத ஈடுபாடு காட்டும் இளைஞர்கள் மற்றொன்று சராசரி இளைஞர்கள் . முதல் வகை இளைஞர்கள் மத கோட்பாடுகள் மாற்றும் நம்பிக்கை சார்ந்த தீவிர மதவாதிகளாய் உள்ளனர். இவர்கள் அரசியல் மற்றும் சமூக செயல்பாடுகளில் அதிக ஈடுபாடு இல்லாதவர்களாக உள்ளனர். இர...