வாசிப்பு

வாசிப்பு

வாசிப்பை கற்றுக்கொடுக்காத, ஆழ்ந்த வாசிப்பை உணராத ஒரு நுனி புள் மேயும் சமுதாயத்தை உருவாக்கியத்தின் விளைவு என்ன என்பதை நாம் தினம் தினம் கண்டு வருகிறோம்

நடிகர் நடிகையர் பின் கண்மூடி தனமாய் அலையும் முட்டாள் தனம் ஆகட்டும், தன்னையே நடிகர் நடிகையராய் நினைத்து வாழும் மனோ வியாதியாகட்டும் ஆழ்ந்த வாசிப்பின் அருமை உணராததின் விளைவே இது.

ஜாதி, மதம், (சமுதாய) மேல் இடை கீழ் என்று எல்லா நிலை மக்களையும் பனி நிமித்தம் நான் சந்திக்க வேண்டியுள்ளது. (இறைவனுக்கு நன்றி)
எல்லா வகை மக்களுக்கும் ஒரே விதமான பிரச்னைகள் இருப்பது விந்தையாகவும் வேதனையாகவும் தோன்றியது (மன்னிக்கவும் நான் சர்க்காரையும் இன்றைய பொருளாதாரத்தையும் குறிப்பிடவில்லை)

ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் இவர்கள் சிக்கி உழன்று, தங்கள் பயத்தையும் - பதட்டத்தையும், சமூக ஊடகங்களில் போலி சுய அடையாளத்தில் ஒளித்து கொள்வதும், சிலர் போதை பழக்கங்களில் அடிமையாவதும், இன்னும் சிலர் வேலையில் போதையாவதும் தினம் தினம் காண்கிறேன். இன்னும் சிலர் ஒரு தவறை மறைக்க பல தவறுகள் செய்யும் அறியாமையும் ஒருங்கே நடை பெறுகிறது.

பெண் சுதந்திரம் முதல் இந்திய பொருளாதாரம் வரை சமூக ஊடகங்களை மட்டுமே நம்பி வாழும் அப்பாவி போராளிகளையும் அறிவு ஜீவிகளையும் பார்க்க கேட்க இப்போதெல்லாம் கோபம் வருவதில்லை மாறாக பரிதாபமே மிஞ்சுகிறது.

உண்மையான
அறிவாளிகள் தங்களை அறிவாளிகளாய் காட்டிக்கொள்வதில்லை...
அழகிகள் தங்கள் அழகினை தம்பட்டம் அடிப்பதில்லை...
ஆனால்
குறை குடங்கள் தளும்புவது இயற்கையின் விதி...
அவை நிறை குடங்களாவது வாசிப்பின் வழி.

வாசிப்பு இழந்த ஒரு சமுதாயம் என்ன செய்யும்?
சுற்றி பாருங்கள் உங்களுக்கே  புரியும்.
தாயின் அடி வயிற்றில் தீ வைக்கும் (அமேசான் காடுகள்)
கண்டதையும் உண்மையென நம்பும் (உலகம் முதல் உள்ளூர் அரசியல் வரை)
எவர் பின்னாவது ஒளிந்து கொள்ளும் (ஜாதி, மதம், போதை, சினிமா, சீரியல்)
தன்னை மட்டுமே முன்னிருதி கொள்ளும் (டிக் டாக் போன்ற ஊடகங்கள்)
எவர் பேச்சையும் கேட்காது, ஒழுக்கம் தவறும், உறவுகளை பாரமாய் என்னும் (பிக் பாஸ் முதல் பள்ளியில் படிக்கும் குழந்தை வரை )

இன்னும் ஒரு நான்கு பக்கம் எழுதலாம்...

சரி இதனால் யாருக்கு என்ன லாபம் என்றால் சத்தியமாய் இதை செய்பவர்களுக்கு இல்லை ...
இதன் முடிவு ஒன்று தனிமை அல்லது ஏமாற்றம்.
இதனால் மற்றவர்களை எதிரிகளாகவும் தங்களை அதி மேதாவிகளாகவும் எண்ணி கொள்ளும் மன நோயாளிகளாய் இவர்களும் அவஸ்தை பட்டு, மற்றவர்களையும் காய படுத்தி வேதனையான ஒரு வாழ்க்கை மட்டுமே மிஞ்சுகிறது.

இப்படியான ஒரு சமுதாயத்தை தான் நாம் வளர்த்து வருகிறோம்.
எல்லாவற்றையும் கேலியாக மற்றவர்களை ஏளனமாக பார்க்கும் முட்டாள் தானம் (அயோக்கியத்தனம்) அரை புத்தி உடைய மனிதர்க்கு மட்டுமே சாத்தியம்.
இந்த சமுதாயம் மீண்டும் அறிவு சார்ந்த சமுதாயமாக வாசிப்பு மட்டுமே ஒரே திறவுகோல்.

வாசிப்பு நம்மை புதிய உலகுக்கு வழி நடத்தும்...
உண்மை யாதென புரிய வைக்கும்...
மன உளைச்சலிருந்து அமைதி தரும்...
எல்லா வற்றிக்கும் மேலாக சக மனிதர்களை நேசிக்க வைக்கும்...
உறவுகள் மேல் நம்பிக்கை வார்க்கும்...

கண்டதை படி பண்டிதன் ஆவாய்...
இன்று
தேர்ந்தெடுத்து படி மனிதன் ஆகு....

Comments

Popular posts from this blog

Life, Love and Suffering

Psycho-Spirituality an Eagles' view

Existence