Posts

Showing posts from August, 2019

வாசிப்பு

வாசிப்பு வாசிப்பை கற்றுக்கொடுக்காத, ஆழ்ந்த வாசிப்பை உணராத ஒரு நுனி புள் மேயும் சமுதாயத்தை உருவாக்கியத்தின் விளைவு என்ன என்பதை நாம் தினம் தினம் கண்டு வருகிறோம் நடிகர் நடிகையர் பின் கண்மூடி தனமாய் அலையும் முட்டாள் தனம் ஆகட்டும், தன்னையே நடிகர் நடிகையராய் நினைத்து வாழும் மனோ வியாதியாகட்டும் ஆழ்ந்த வாசிப்பின் அருமை உணராததின் விளைவே இது. ஜாதி, மதம், (சமுதாய) மேல் இடை கீழ் என்று எல்லா நிலை மக்களையும் பனி நிமித்தம் நான் சந்திக்க வேண்டியுள்ளது. (இறைவனுக்கு நன்றி) எல்லா வகை மக்களுக்கும் ஒரே விதமான பிரச்னைகள் இருப்பது விந்தையாகவும் வேதனையாகவும் தோன்றியது (மன்னிக்கவும் நான் சர்க்காரையும் இன்றைய பொருளாதாரத்தையும் குறிப்பிடவில்லை) ஏதோ ஒரு கற்பனை உலகத்தில் இவர்கள் சிக்கி உழன்று, தங்கள் பயத்தையும் - பதட்டத்தையும், சமூக ஊடகங்களில் போலி சுய அடையாளத்தில் ஒளித்து கொள்வதும், சிலர் போதை பழக்கங்களில் அடிமையாவதும், இன்னும் சிலர் வேலையில் போதையாவதும் தினம் தினம் காண்கிறேன். இன்னும் சிலர் ஒரு தவறை மறைக்க பல தவறுகள் செய்யும் அறியாமையும் ஒருங்கே நடை பெறுகிறது. பெண் சுதந்திரம் முதல் இந்திய பொருளாதாரம்...