மனைவியதிகாரம்
நீ இருக்கின்றாய்...
மலராக இருக்கின்றாய்,
சில நேரம் முட்களாகவும்
இரவினில் தேனாக இனிக்கின்றாய்,
விடியும் நேரம் -
விஷமாக தொண்டையில் நிற்கின்றாய்...
நீ இருக்கின்றாய்...
வழியாக, துணையாக வழி எங்கும் என் விழியாக
சுமையாக, சுகமாக பழி சுமக்கும் என் விதியாக
நீ இருக்கின்றாய்...
தனிமையின் துணையாக,
நினைவுகளின் விளம்பரமாக,
என் விந்தின் தாயாக
நீ இருக்கின்றாய்...
இன்பம் துன்பம் இரண்டுமாக
இன்னல் போக்கும் மருந்தாக
என் இடிகள் தாங்கும் பாறையாக
நீ இருக்கின்றாய்
அவ்வப்போழ்து நீ இருக்கின்றாய் - நானாகவும்...
சில நேரங்களில் நீ இருக்கின்றாய் - நீயாகவும்.....
எப்(படி)பொழுதும் இருக்க முடிகிறது உன்னால் மட்டும் நாமாக...!!!???
Comments
Post a Comment