Posts

Showing posts from February, 2019

நட்பதிகாரம்

நீ யாரோ நான் யாரோ சில வருட நட்பில் நீ வேறோ நான் வேறோ நட்பென்பது யாதெனில் எத்துனை யுகமானாலும் கடைசியாய் பேசிய கதையை - மீண்டும் புதியதாய் பேசி களிக்கும் இதயம் உன்னை காணாமல் தாங்கிய தனிமையை விட உன்னை கண்ட பின் வரும் தனிமை கொடியது காதல் பகிர காமம் பகிர ஆயிரம் உண்டிங்கு தொழில்நுட்பம் நம் நட்பே ஒரு நுட்பம் - இதை அறிய இயலாத மானுடம் ஒரு வெற்று பிண்டம் மகிழ்ச்சியை போல் துக்கங்களும்... புன்னகை போல் கண்ணீரும்... ஒரு புள்ளியில் நிற்பது நட்பின் நிழலினிலே வினைகள் விளையாட்டாய் விளையாட்டு வினைகளாய் சில நட்புகள் தொடர சில பிரிவுகளும் நிகழும் காதலில் வென்று திருமணத்தில் தோற்கும் காமத்தினை போன்று - நட்பினில் துயரம் ஏதுமில்லை நட்பு பொய்யாகவும் நிஜமாகவும் நட்பு நிழலாகவும் அசலாகவும் வாழும் மட்டும் வாழ்ந்த பின்னும் தொடரும்.... இது தொடரும்....

மனைவியதிகாரம்

நீ இருக்கின்றாய்... மலராக இருக்கின்றாய்,  சில நேரம் முட்களாகவும் இரவினில் தேனாக இனிக்கின்றாய், விடியும் நேரம் - விஷமாக தொண்டையில் நிற்கின்றாய்... நீ இருக்கின்றாய்... வழியாக, துணையாக வழி எங்கும் என் விழியாக  சுமையாக, சுகமாக பழி சுமக்கும் என் விதியாக  நீ இருக்கின்றாய்... தனிமையின் துணையாக, நினைவுகளின் விளம்பரமாக, என் விந்தின் தாயாக நீ இருக்கின்றாய்... இன்பம் துன்பம் இரண்டுமாக  இன்னல் போக்கும் மருந்தாக என் இடிகள் தாங்கும் பாறையாக   நீ இருக்கின்றாய்  அவ்வப்போழ்து நீ இருக்கின்றாய் - நானாகவும்... சில நேரங்களில் நீ இருக்கின்றாய் - நீயாகவும்..... எப்(படி)பொழுதும் இருக்க முடிகிறது உன்னால் மட்டும் நாமாக...!!!???